அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது. 😯
நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்? 🤔
“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.
ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?
உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. ☕
ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும். 🍵
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும். 💭
இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம். 🌸
வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும். 💫
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான். 😌
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம். 🙏
வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?
கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? 😠
நிச்சயம் இல்லை. 🙅♂️
வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது. 🪷
அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்… 💖
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்! 🌈
நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்! 🌿
😊 மகிழ்ச்சி. ✨
பகிர்வு

No comments:
Post a Comment