Friday, April 14, 2023

Judgemental - from my perspective

எது நல்லது?
எது கெட்டது?
யார் முடிவு செய்வது?

மற்றவரை எடைபோட எனது கையில் பல தராசுகள் உள்ளன.
பல கண்ணாடிகள் உள்ளன.
என்னுடைய அனுபவம் மற்றும் எனக்கும் அவருக்கும் உண்டான தனிப்பட்ட நல்லுறவை பொருத்து இந்தக் கண் கண்ணாடிகள், தராசுகள் மாறுபடுகின்றன.
எது சரி மற்றும் எது தவறு என்பது பார்க்கும் பார்வையில் மட்டுமல்லாது எந்த திசையிலிருந்து பார்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது.
பெரும்பாலான தருணங்களில் நான் எதை பார்க்க விரும்புகிறானோ அல்லது எதை கேட்க விரும்புகிறேனோ அது மட்டுமே என் கண்ணில் படுகிறது ... என் காதில் விழுகிறது...

எது சரி மற்றும் எது தவறு என்பதை முதலில் நம் மனம் தீர்மானித்து விடுகிறது...
சிறிய மாற்றத்தை கூட ஏற்க மனம் மறுக்கிறது...
நம் கருத்தை நியாயப் படுத்துவதிலும், வலியுறுத்துவதிலும் சிந்தனை செல்கிறது.

நான் ஏன் இந்த கருத்தை ஏற்க வேண்டும்?
என்னை விட சிறிய மனிதனிடமிருந்து நான் ஏன் ஏற்க வேண்டும்?
இன்று நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்பாங்கு இதுதான்...

மாறுவோம்.
மாற்றுவோம்..
வாருங்கள்...

நாணயத்தின் இரு பக்கத்தையும் உற்று நோக்குவோம்.
இறுதியாக, இது உங்கள் நீதிமன்றம்...
நீங்கள்தான் நீதிபதி.
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..
யாரும் உங்களுக்காக முடிவெடுக்க மாட்டார்கள்...
அந்த முடிவு சரியாக இருக்காது.

எது நல்லது?
எது கெட்டது?
யார் முடிவு செய்வது?

No comments:

Post a Comment